மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் 4 லட்சத்தி 49 ஆயிரத்தி 606 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்- அரசாங்க அதிபர்/ மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன்

  

   

 வரதன்

 

 

 

மட்டக்களப்பு  மாவட்டத்தில் இதுவரை  11 தேர்தல் வன்முறை மீறல்கள் பதிவாகியுள்ளன தேர்தல் பாதுகாப்புக்காக போலீசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் - மாவட்ட அரசாங்க அதிபர்  மாவட்ட தேர்தல்   தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதரன்  தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் 4 லட்சத்தி 49 ஆயிரத்தி 606  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தொகுதியில் இருந்து 1 லட்சத்தி 34 ஆயிரத்தி 104  பெயரு   ம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் மட்டக்களப்பு தொகுதியில் இருந்து  2 லட்சத்தி 10 ஆயிரத்தி 293 பெயரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்  பட்டிருப்பு தொகுதியில் இருந்து 1 லட்சத்தி 05 ஆயிரத்தி 209 பெயரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்   442 மொத்த வாக்களிப்பு நிலையங்களாக  அமைக்கப்படவுள்ளன
 

இதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும் மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும் பட்டிருப்பு தொகுதியில் 122  வாக்களிப்பு நிலையங்களும். அமைக்கப்படவுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்   தபால் மூல வாக்களிப்புக்கு  தகுதி பெற்றுள்ளவரின் எண்ணிக்கை 13 116  

தபால் மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 4 திகதி மாவட்ட செயலகம்- தேர்தல் அலுவலகம் -போலீஸ் நிலையம்  5ம்- 6 ம்திகதிகளில் ஏனைய அரச அலுவலகங் களிலும் இதில் வாக்களிக்க தவறியவர்களுக்காக  11 ம்- 12 ம் ஆகிய திகதிக ளிலும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற  உள்ளன தேர்தல் காண முன்னேற்பாடு அலுவல பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதுவரை மாவட்டத்தில் 11 தேர்தல்  மீறல்கள் பதிவாகியுள்ளன அதில் அதிகமானவை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் சம்பந்தமானவை

 மாவட்டத்தில் தேர்தல் வன்முறை செயல்கள்  எதுவும் இதுவரை பதிவாகவில்லை மாவட்டத்தின் தேர்தல் பாதுகாப்புக்காக போலீசார் பல பகுதிகளிலும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் அமைதியான தேர்தலை முன்னெடுக்க தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் சம்பந்தமான  இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக பிரதி ஆணையாளர் எஸ் எம் சுபியான் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ் நவரூபரஞ்சனி ஆகியோர் இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கலந்து கொண்டனர்.