மட்டக்களப்பில் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் -2024





 















































மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மற்றும் அக்சன் யூனிட்டி லங்காவுடன்  இணைந்து  நடாத்திய  மாவட்ட தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வானது  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  தலைமையில்   தேவநாயகம் மண்டபத்தில் இன்று (22) இடம் பெற்றது.

இதன்போது 30 மேற்பட்ட தொழில் வழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு தமது சேவைகள்  தொடர்பாக  இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தினர்.

தொழில் தேடுனர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான நேர்முக தேர்வு மற்றும் தொழிற்பயிற்சிக்கான நேர்முக தேர்வு, தொழில் பயிற்சிகளுக்கு உள்ளீர்பதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்று தெரிவு செய்யப்பட்டனர்.


இவ் தொழிற்சந்தையில்  வேலை தேடுனர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல் குறித்த  நிபுணர்களினால் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தொழிற்சந்தை  மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வில் சுமார்  700 க்கு அதிகமான இளைஞர் யுவதிகள்  பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில்  உதவி மாவட செயலாளர் ஜீ.பிரணவன்,  மாவட்ட செயலக தொழில் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.