போரினாற் பாதிக்கப்பட்டு, நலிவுற்ற சமூகங்களில் வாழும் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்தும் இளந்தளிர் அமைப்பின் ஐந்து வருடகாலத் திட்டம். மட்டக்களப்பில் ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலர் பிரிவிலும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் கடந்தவருடம்; 2023 இலிருந்து அமுற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சிறுவ ர் பிரதிநிதிகள் 480 பேரை உள்வாங்கி அவர்களின் ஆற்றல்களை சிறுவர் உரிமைசார் அணுகுமுறையின் ஊடாக மேம்படுத்தும் வகையில் நூற்றியிருபது இளையோர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கான செயற்றிறன்மிக்க பயிற்சிகள் குறிப்பாக நாடக ஆற்றுகையினூடாக புத்தாக்கத்திறன்களை வளர்த்தல், சிறார்களை நெறிப்படுத்தும் வல்லமையினைக் கட்டியெழுப்பல், உள-சமூக உணர்வுகளைச் சாதகமான வகையில் கையாளும் திறன்களைவழங்கல், இதன்வழி சிறுவர்களின் ஆற்றலை மேம்படுத்தி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் (18.08.2024) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இந்து இளைஞர் மன்ற முதியோர் இல்ல மண்டபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. திருஞானம் தர்மலி;ங்கம் அவர்களின் நெறிப்படுத்தலுடன் பயிற்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட இரு பிரதேசசெயலகப் பிரிவைச் சேர்ந்த 30 யுவதிகள் கலந்து கொண்டதோடு அவர்களுக்கான ஆரம்ப ஆற்றுகைத்திறன் உத்திகள் ,நுட்பங்கள், தளர்வுப் பயிற்சிகள் நடிப்பு ஒத்திகைள், சிறார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மையப்படுத்திய எழுத்து உருவாக்கம், காட்சி உருவாக்கம் மற்றும் பிரயோக பரீட்சார்த்தங்கள் என பலவிடயங்கள் பயிற்சியின் மூலம் வழங்கப்பட்டன. இவர்கள் தாம் பெற்ற திறன்களைக் கொண்டு, சிறுவர்களை ஆற்றலுள்ளவர்களாக்கவும், திட்டப் பிரதேசங்களில் தலா 120 சிறுவர்களை இணைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஈகுவாலிட்டி கிளப் (சமத்துவக்கழகங்கள்) மூலமாக சிறுவர்களின் ஆற்றலை மேம்படுத்தவும், அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், பொறுப்புள்ள பெற்றோராகவும் நட்புறவுள்ள பெற்றோராகவும், பெற்றோர்கள் அவர்களது கடமை பொறுப்புக்களை விளங்கிக் கொண்டு பிள்ளைகளைப் பராமரிக்கவும் வழிகாட்டுவார்கள்.
பிள்ளைகளுக்கு எதிராக ஏற்படும் சகல விதமான வன் துஸ்பிரயோக சம்பங்களைத் தடுக்கவும் நலன்களை உறுதிசெய்யும் வகையில் சிறுவர் சார்ந்து பணியாற்றும் அரச அதிகாரிகளுடனும் சமூகமட்ட அமைப்புக்களுடனும் இணைந்து தமது திட்டத்தினை முன்னெனடுத்துச் செல்வார்கள். குறித்த நிகழ்வில் விழுது நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் கண்காணிப்பு மதிப்பீட்டு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டு, தமது காத்திரமான பங்கேற்பினையும் பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.