சுவாமி ஜீவானந்தஜி நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் இன்று 2024.08.24சுவாமி ஜீவானந்தஜி மகாராஜ் திரு உருவச்சிலையை மூத்த துறவி சுவாமி இராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்களால் மட்டக்களப்பு கல்முனை வீதி இந்து கலாச்சார மத்திய நிலைய முன்றில் நாவற்குடா பிரதேசத்தில் திரை நீக்கம் செய்யப்பட்டது .
அதனை தொடர்ந்து நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில் பிராத்தனை , ஒளி தீபங்கள் ஏற்றும் நிகழ்வு இடம் பெற்றது, வரவேற்புரையை வருண் கமலதாஸ் மற்றும் ஆசியுரையை ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் அவர்களும் , தலைமையுரையை சுவாமி ஜீவானந்தஜி நூற்றாண்டு விழாச்சபையின் பிரதித்தலைவர் எஸ் , ஜெயராஜா அவர்களும் நிகழ்த்தி இருந்தார்கள் .
மேலும் ஜீவானந்தஜி மகாராஜ் அவர்களுடனான நினைவுப் பகிர்வுகளும் பதிவு செய்யப்பட்டன .
சுவாமி ஜீவானந்தஜி மகாராஜ் திரு உருவச்சிலையை வடிவமைக்க முழு நிதிப்பங்களிப்பு செய்த கந்தையா கிருபைநாதன் கௌரவிக்கப்பட்டார் .
நன்றி உரையை சுவாமி ஜீவானந்தஜி நூற்றாண்டு விழாச்சபை செயலாளர் கண.வரதராஜன் வழங்கினார் .
நிகழ்வுக்கு ஏராளமான பிரதேச வாழ் பொது மக்களும் , சான்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .