மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள பிரதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியை கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் தரிசனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுமியை அதே பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 44 வயதுடைய ஆசிரியர் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மட்டுநகர் பகுதிக்கு பிராயாணித்துள்ளார்
இதனை கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து நகர்பகுதியில் வைத்து பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் அவர் அந்த அங்கிருந்து சிறுமியுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த ஆசிரியரை வியாழக்கிழமை (15)) திகதி ஏறாவூர் பொலிஸார் கைது ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தினர். அவரை 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.