15 வயதுடைய இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்

 


மொனராகலை வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டாவெஹெரகலயவில் வசிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகள்   கடந்த (15) ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை   ஒன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் இந்த இரு மாணவிகளில் ஒருவர்  கொடவெஹெரகலய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் இவரது நண்பர் ஒருவர் கடந்த (14) ஆம் திகதி மாலை இவரது வீட்டிற்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளார்.

மறுநாள் காலை இரண்டு மாணவிகளும் வீட்டில் இல்லை. இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வெல்லவாய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.