வரதன்
எமது நாடு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் மிகத் தீர்க்கமான முடிவை எடுத்து நம்பிக்கையுடைய தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளோம் தமிழ் பொது வேட்பாளர் என்பது தேவையற்ற விடயமாகும்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பு. பிரசாந்தன்
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச எமது கட்சியை பொறுத்தவரை சிறந்த நண்பர் தான் இன்றும் ஆனால் நாடு இன்று இருக்கும் நிலைமையினை பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு தலைவரா ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார் எனவே காலத்தின் தேவையாக அவரை ஆதரிக்க வேண்டி உள்ளது
நாங்கள் மாத்திரம் அல்ல இந்த நாட்டின் பெரும்பான்மையான தலைவர்கள் நாட்டில் முன்பு இருந்தது போல் எரிபொருள் வரிசைகள் இல்லாமல் இருப்பதற்கும் நாட்டில் ஒரு கலவரம் அற்ற சூழலை முன்னெடுப்பதற்கு நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி வரக்கூடாது என்று நேசிக்கின்ற அனைவரும் எமது நாடு வெல்ல வேண்டும் இங்கு உள்ளவர்களும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உடையவர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கத்தை ஆதரித்து கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பற்று வைப்பதற்கு IMF இன் உதவிகள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில். அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லக்கூடிய நம்பிக்கையுடைய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே காணப்படுகின்றார்
சிறந்த வெளிநாட்டு கொள்கை உடைய ஒருவரை 13வது திருத்தச் சட்டத்தின் நாட்டில் ஒரு நிரந்தர தீர்வு திட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்க வேண்டும் என எமது தலைவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்
எமது கட்சி அறியாசனம் வருவதற்காக அரசியலுக்கு வந்த கட்சி அல்ல மக்களை ஏமாற்றாமல் இம்முறை கூட மிகத் தீர்க்கமான முடிவை எடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளோம் இவ்வாறான சூழ்நிலையில்
கிழக்கு மக்களை நேசிக்கும் கட்சி என்ற வகையில் தமிழ் பொது வேட்பாளர் என்பது இது கருத்து சொல்வதற்கும் அப்பாற்பட்ட தேவையற்ற விடயமாகும்
ஜனாதிபதியின் வெற்றிக்காக அவருடன் ஒப்பந்தம் 34அரசியல் கட்சிகளில் கிழக்கு மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பு. பிரசாந்தன் இன்று மட்டக்களப்பில் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது
தங்களது கட்சி முன்பு மொட்டு கட்சியை ஆதரித்து செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த வேலை தற்போது நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்காமல் ஏன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகின்றீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.