வரதன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சம்பந்தர் ஐயா என்ற தூணில்தான் அந்தக் கட்சி இவ்வளவு நாளும் தங்கியிருந்தது தமிழர்களின் உரிமைக்காக தள்ளாடும் வயதிலும் குரல் கொடுத்த ஒரு மாமனிதரை இழந்து நிற்பது ஒரு வேதனையான விடயம். அவரது செயற்பாட்டுகளை நாம் மதிக்கின்றோம் அவரது இழப்பு மகா இழப்பாகும் - தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பல கூறுகளாக சிதறிப்போயுள்ளதன் காரணமாக தமது கட்சியுடன் அனைவரையும் இணைந்து பயணிக்க முன்வருமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்திற்கான உதவி திட்டங்கள் பிரதான நிகழ்வு முன்னாள் பிரதி அமைச்சர் தலைமையில் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது கடந்த கால யுத்த அனர்த்தங்களின் போது பின்தங்கிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை இதன்போது வழங்கப்பட்டது இந்த வாழ்வாதார செயல்திட்டம் ஆனது கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட உள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் கிழக்கு மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இதன்போது முன்னாள் போராளிகள் 100பேருக்கு தமது வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தும் வகையில் 10 இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் செந்தூரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,அமைப்பாளர்கள்,முன்னாள் போராளிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.