இலங்கை தமிழர் ஒருவருக்கு முதன் முறையாக மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது

 

 


 முதல் முறையாக இலங்கை தமிழருக்கு மலேசியா பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
மலேசிய பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை சென்ற கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு அந்நாட்டு சபாநாயகர் ஜோஹாரி அப்துல், பாராளுமன்ற உறுப்பினர் YB துவான் சோங் சியெங் ஜென்,டத்தோஸ்ரீ  சரவணன் முருகன் மற்றும் ஏனைய பாராளுமன்ற  உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  மலேசியா பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு முதன் முறையாக மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது.