களுவாஞ்சிகுடியில் வீதி சமிக்ஞை மின் விளக்கு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கலந்து கொண்டார்



 


 

  •  








 


(ஆர்.நிரோசன்)

 

களுவாஞ்சிகுடியில்   (13) சனிக்கிழமை மாலை 4.00மணி அளவில் மக்கள் வங்கி முன்பாக பிரதான வீதி முச்சந்தியில்  சமிக்ஞை விளக்கு அங்குரார்ப்பண  நிகழ்வில்   இராஜாங்க அமைச்சர் சிவநேத்துதுரை
 சந்திரகாந்தன்  மற்றும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன   கலந்து கொண்டனர் , அங்கு  அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றும் போது நான் அமைச்சராக  இருக்கின்றேன் வீதி அபிவிருத்திக்காக  தற்பொழுது எனக்கு 50 லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது,  ஆனால்     ஆயிரம் மில்லியன் ரூபாவை விட  அதிகமான பணம்  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு  அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிடைக்கப் பெற்றதை நினைத்து மகிழ்ச்சி   அடைகின்றேன்  என்று  தெரிவித்தார்..

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கிராமிய மத தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.