சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தயாராகிறது .

 


ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்குச் சமுகமளித்த அரச ஊழியர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு அரச சேவையினரின் வேதன கோரிக்கையை ஏற்காமல், பணிக்குச் சமுகமளித்த ஒரு சிலருக்கு மட்டுமே வேதன உயர்வை வழங்குவதற்கான தீர்மானத்தைத் தடுக்க சட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.