மட்டு.மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழா முற்றத்தில் விழிப்புணர்வுக் கண்காட்சி-2024

 



 



 


 


 


 


 


 


 


 


 

 


 


 

 






 

 

(கல்லடி செய்தியாளர்  &   செய்தியாசிரியர் )

 

 


சிறுவர்கள் இளையோர்களுக்கான மூன்றாவது கண் நண்பர்களின் ஒழுங்கு படுத்தலில்  மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தினை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சனிக்கிழமை (27), ஞாயிற்றுக்கிழமை ( 28) ஆகிய தினங்களில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை காணாமலாக்கப்பட்ட, அருந்தலாக்கப்பட்ட மரபார்ந்த உள்ளூர் மரக்கன்றுகள், செடிகள், விதைகள், கனிவகைகளை "அறிவோம் பகிர்வோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கண்காட்சியை நடாத்துகிறது.

இவை பற்றி அறிந்த அனுபவமுள்ள  மூத்தவர்கள் வாருங்கள்,  மூத்தவர்களை அழைத்து வாருங்கள் என "நன்னிலம்"  உள்ளுர்  தாவரங்களை மீளுருவாக்குதலும்  பரவலாக்குதலும்  செயற்பாட்டாளர் திருமதி சிந்து உஷா  விஜேந்திரன் அவர்கள் அழைப்பு விடுக்கிறார் .

மட்டக்களப்பு 23/1 நெசவு நிலைய வீதி மஞ்சந்தொடுவாய் எனும் இடத்தில்  நன்னில செயற்களத்தில் மரபு முறைப்படி உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகளை திணைக்களங்களுக்கும் , வணக்க ஸ்தலங்களுக்கும் பொது இடங்களுக்கும்    விநியோகம் செய்து ஆக்க பூர்வமான செயற்பாட்டில் ஈடு பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது .  

பேராசிரியர் சி.ஜெயசங்கர் இவ் நிகழ்வுக்கு பிரதான ஆலோசகராக  .செயலாற்றிவருகிறார் .