(மட்டக்களப்பு நிருபர் &செய்தியாசிரியர் )
இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய ஆனி உத்தரத் தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை இடம்பெற்றது.
முதலில் மூலமூர்த்தியாகிய சுயம்புலிங்கப் பிள்ளையாருக்குப் பூஜைகள் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து,ஆலய முன்றலில் அமைந்துள்ள தீர்த்தக்கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ,வேத பாராயணங்கள் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில் இவ் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் கடந்த 03.07.2024 அன்று பூர்வாங்கக் கிரியைகளுடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.