இலங்கையில் கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 488 மனிதக் கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றுள் 52 கொலைச் சம்பவங்கள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தங்கல்லை, நுகேகொட, கம்பஹா , ரத்னபுர மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 என்ற அடிப்படையில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் 2018-2022 ஆகிய காலப்பகுதியில் படுகாயங்கள் மற்றும் மனிதக் கொலைகள் 7017 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை, அதன் மூலம் 2030 குற்றங்கள் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
நாட்டில் குற்றங்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 6 வருடங்களில் வீடுகளில் திருடுதல், கொள்ளையடித்தல் போன்றவை கடந்த ஆண்டில் அதிகளவில் பதிவாகியள்ளன.
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் குறித்த குற்றங்கள் 50 வீத வளர்ச்சியைக் காட்டுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான அதிகார குற்றங்கள் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் 27 வீதம் அதிகரித்துள்ளது.
பெண்கள் துஷ்பிரயோகம் 182 இல் இருந்து 226 வரையில் அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.