கிழக்கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும் நூல் வெளியீட்டு நிகழ்வு

 














  






வரதன் 
 

 

 

இலங்கைத் திருநாட்டின் இன மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கதிர்காம முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமாக உள்ள நிலையில் வடக்கிலிருந்து கால்நடையாக தற்போது அடியார்கள் கிழக்கு மாகாணத்திற்கு வந்துள்ளனர்
 இன்று நூல் ஆசிரியர் கலாநிதி வா. குணா பால சிங்கம் எழுதிய கிழக் கிலங்கையில் முருக வழிபாடும் வரலாறும் வழமைகளும்  நூல் வெளியீட்டு நிகழ்வு  கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிர்வகத்தில் கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறை.விரிவுரையாளர் K.ராஜரத்தினம்  தலைமையில் இடம்பெற்றது
 கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வா. கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக திருமதி பாரதி கென்னடி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிர்வகத்தின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டனர் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இலக்கியவாதிகள் மாணவர்கள் பொதுமக்கள் எனும் கலந்து கொண்டர்.
 இந்நிகழ்வில இந்த நூலின் வரவேற்புரையை நா.வாமணன் தலைவர் இந்து நாகரீகம் கிழக்கு பல்கலைக்கழகம் -தலைமை உரை கிழக்கு பல்கலைக்கழக புவியியல் துறை.விரிவுரையாளர் K.ராஜரத்தினம் - நூல் அறிமுக உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா சுபராஜ் இவ்வுலின் மதிப்பு துறையை பேராசிரியர் திருமதி. அம்மன்கிழி முருகதாஸ் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது
அதிதிகள் வரவேற்கப்பட்டு இறைவணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்று  நூல் ஆசிரியர் நாள் பிரதம அதிதிக்கு நூல் வெளியீடு வழங்கி வைக்கப்பட்டது.கலைப்பிரிவில் கல்வி பொதுத் தராதர உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்நூல்  பயனுள்ளதாக அமைய உள்ளது.