மட்டக்களப்பு கிருஷ்ணகுமார் ஹரிஷ் பிரசாத் மல்யுத்த போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

 

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணகுமார் ஹரிஷ் பிரசாத் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தில் பயிற்சிவிப்பாளர் வே.திருச்செல்வம் அவர்களின் மாணவனாவார்.
கடந்தவாரம் கொழும்பு டொரிங்டன் உள்ளரங்கில் நடை பெற்ற 20வயதுக்கு உட்பட்ட 57 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
.அடுத்த மாதம் ஜூலை 16 ம் திகதி தாய்லாந்து நாட்டில் இடம் பெற இருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில்
பங்குபற்றுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார் .