மட்டக்களப்பில் அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தின் வெசாக் தன்தல் நிகழ்வுவானது ஐகப் (IHub) நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் எற்பாட்டில் நிறுவன உப இணைப்பாளர் ஆர்.இரோஷா, கண்காணிப்பில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் தன்சல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும்,
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஐகப் நிறுவனத்தினால் தன்சல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தன்சல் நிகழ்வை சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும்
iHub இன் தன்னார்வ உறுப்பினர்களின் பங்கெடுப்புடன் தன்சல் தான நிகழ்வு இடம்பெற்றது.















