வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியா பெங்களுரில் சந்தித்து கலந்துரையாடினார்.

 


இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்தியா பெங்களுரில் சந்தித்து கலந்துரையாடினார்

மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் தற்போதைய நிலைவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு தெளிவுபடுத்தியுள்ளார் ஜீவன்.

 அதேபோல பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவரித்துள்ளார்

வாழும் கலை நிறுவனத்தின் கீழ், பிரஜா சக்தி, தொண்டமான் அறக்கட்டளை போன்றவற்றின் ஊடாக எமது மக்களுக்கு தொழில் பயிற்சி, தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல நீர்வளத்துறை பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின் இறுதியில், மலையக சமூகத்தைச் சேர்ந்த செல்லையா கோபாலன் என்ற கலைஞர் வரைந்த ஓவியத்தை குருஜியிடம் நினைவு பரிசாக வழங்கியுள்ளார் அமைச்சர் ஜீவன்.