மட்டக்களப்பு தன்னாமுனை சூசையப்பர் கல்லூரியில் சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு .










(கல்லடி செய்தியாளர் & சூசைதாசன் )

மட்டு/ தன்னாமுனை சூசையப்பர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தால் பாடசாலையின் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும்  நிகழ்வு நேற்று  கல்லூரி ஒன்றுகூடல் நிகழ்வின் போது    புதன்கிழமை (29) கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் ரவீந்திரா இக்னேசியஸ் ராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பழைய மாணவர் ஒன்றியச் செயலாளர் மரியதாசன் சூசைதாசன் மற்றும் உபசெயலாளர் வேலாயுதம் புவிதாசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மூன்று தரங்களிலும் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டோருக்குப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.