இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை.

 


இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இதுவரையில் கிடைக்கவில்லை என்று ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார். இன்று மாலை அவா் வெளியிட்ட அறிக்கையிலேயே இது தொடா்பாகத் தெரிவித்துள்ளாா்.

இன்று 10 ஆம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.

ranjith ஊழி திரைப்படத்தை இலங்கையில் திரையிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை - காத்திருப்பதாகக் கூறுகிறாா் இயக்குநா்இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள ஊழி திரைப்படம் இன்று 10ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இலங்கையில் இத் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான நிலவரத்தை இவ் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் 8ஆம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.

கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் என்று இயக்குனா் ரஞ்சித் ஜோசப் தெரிவித்தாா்