நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

 


நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருந்தால் பிரச்சினை ஏதும் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் சில விளக்கங்களை கோரியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது நல்லது என்று நான் நினைக்கிறேன். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என நான் எதிர்க்கட்சித் தலைவிடம் கூற விரும்புகிறேன். ஏப்ரல் 10 ஆம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றிருந்தால், எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினைகள் நான் என் திறனுக்கு ஏற்றவாறு இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு செயல்படுகிறேன்," என்று ஜனாதிபதி கூறினார்.