வெசாக் வாரத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியின் நிறத்தில் ஒளிரவுள்ளது

 


வெசாக் போயாவை முன்னிட்டு பௌத்த கொடியின் நிறத்தில் தாமரை கோபுரம் ஒளிரும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமை நிறுவனம் (தனியார்) தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை 24) கோபுரம் பௌத்த கொடி நிறங்களில் ஒளிரவுள்ளது.

இதற்கிடையில், கோபுரத்தின் முகாமைப் பீடம் வெசாக் காலத்தின் போது அவர்களின் புதிய Pixel Bloom இயக்க நேரத்தை அறிவித்தது.

அதன்படி மே 23ஆம் திகதியிலிருந்து மே 26ஆம் திகதி வரையில் Pixel Bloom பகுதி காலை 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரையில் இயங்கும்.

மேலும் 26 ஆம் திகதி காலை 9 மணிமுதல் இரவு 10 மணிவரை இயங்கவுள்ளது என புதிய நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.