உலகத் தன்மம் சமூக அமைப்பின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கடற்கரையோரத்தினை சூழல் நேய தூய்மையாக்கும் பணி.

 

 


 


 



வைத்திய அதிகாரி காரியாலயங்களின் அனுமதியுடன்  பாலமீன்மடு கடற்கரை
பிரதேசத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை உலகத் தன்மம் சமூக அமைப்பின் அமைப்பின் உறுப்பினர்கள் சுமார் 35
பேர் உட்பட கொக்குவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களின் பணிப்புரையின் பேரில் பொலிஸ்   உத்தியோகத்தர்கள் ஐவர், பாலமீன்மடு கிராம சேவகர் பிரிவுக்குப் பொறுப்பான பொதுச்
சுகாதாரப் பரிசோதகர், மாநகர சபையின் பொதுச் சசுகாதரப் பரிசோதகர், கிராம அபிவிருத்திச்
சங்கத்தின் பிரதிநிதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து தூய்மையாக்கும் பணி
முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 02 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இப்பணியில் 2 ஏக்கர் பரப்பளவிலான கடற்கரை  ஓரங்களில் பரவிக் கிடந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் உக்காத   கழிவுகள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டு மாநகரசபை மூலம் சேகரிக்கப்பட்ட கழிவுகளை  கழிவு சேகரிக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்வது வரையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம்   செய்யப்பட்டுள்ளது.

இப்பணியை திட்டமிட்ட வகையில் செய்து முடிப்பதற்கு கையுறை, உரப்பைகளை தந்துதவிய மாநகர சபை ஆணையாளர். சுகாதாரப் பகுதி உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோக பூர்வ  ஒத்துழைப்புக்களை வழங்கிய பொதுச்சாதார பரிசோதர்கள், பொலிஸ் அதிகாரிகள், பணியில்   கைகோர்த்த கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் விசேடமாக பல்வேறு பகுதிகளில் இருந்துகைகோர்த்த கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் விசேடமாக பல்வேறு பகுதிகளில் இருந்து   வருகை தந்து பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவிய அமைப்பின் உறுப்பினர்கள்   மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உலகத் தன்மம் சமூக அமைப்பு தெரிவித்துக்கொண்டது