நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமது ஜனாதிபதி வேட்பாளா் தயாராக இருப்பதாகவும் அவா் அறிவித்தாா்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு நிலையம் பத்தரமுல்லை ஜயந்திபுர மாவத்தையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.





