பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன், இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





