மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

















(கல்லடி செய்தியாளர்)

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் 15 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (18) மாலை கல்லடி கடற்கரையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன்  கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,உயிர்நீத்தோரின் உறவுகள்,சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,அகவணக்கம் செலுத்தப்பட்டு,மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இவ்வுணர்வு பூர்வமான நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்ததாவது:-

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் கஞ்சியைக் குடித்தே வாழ்ந்தார்கள். இவர்களின் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை இன்று எண்ணிப் பார்க்கையில் கவலையாகவுள்ளது என்றார்.