மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளீர் பாடசாலையில் விவேகானந்தரின் உருவச் சிலை வைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு .




 















1912ம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷன்  சகோதரி அவபாமியா அம்மையாரால் விவேகானந்தா பாடசாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது  அதன் பின்னர்  விவேகானந்தா பாடசாலை 1926ம் ஆண்டு  சுவாமி விபுலானந்த  அடிகளாரிடம்     கையளிக்கப்பட்டது.
100 வருடங்கள்  கடந்த நிலையிலும் பாடசாலை வளாகத்துக்குள்   சுவாமி விவேகானந்த அடிகளாருக்கு சிலை வைக்கக்பட வேணடும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  பிரதேச மக்களாலும் , கல்விமான்களாலும்    விடுக்கப்பட்டிருந்தது .
அதை கருத்தில் கொண்டு  இன்று    விவேகானந்தா    பெண்கள் உயர்தர பாடசாலை    வளாகத்துக்குள்  மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மகராஜ் தலைமையில்   மட்டக்களப்பு விவேகானந்தா நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்  சுவாமி விவேகானந்தரின் உருவச் சிலை வைப்பதற்காக   அடிக்கல் நாட்டும் நிகழ்வு  பூஜை வைபவங்களுடன்      சுப வேளையில்     இடம்பெற்றது
  இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மகராஜ் அவர்களால் அடிக்கல்  நட்டு வைக்கப்பட்டது
 இவ்வைபவத்தை அதிபர் நவகீதா தர்மசீலன்  அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்கள்..
மேலும்  சுவாமி விவேகானந்தா நற்பணி மன்றத்தின்  சார்பில் பொருளாளர்,  கலாபூஷணம் சரவணபவன் கலந்து கொண்டு   சிறப்பித்தார்.