அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அடுத்த வாரம் இலங்கை வருகிறார் .

 


தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.