சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்.

























சவூதியின் ஒளி இலவச
 கண்புரை சத்திர சிகிச்சை முகாம்  (06) திங்கட்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பமானது.

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான  மன்னர் மையம்'  (King Salman Humanitarian Aid and Relief Centre)  இதற்கான நிதி அனுசரண வழங்குகின்றது. அத்துடன்,  'சவூதியின் ஒளி'   பார்வைக் குறைபாடு மற்றும்  அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும்  தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம்  என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சந்திர சிகிச்சை இடம் பெறுகிறது

,இலங்கையில் ஆபிஸ்( AMYS) நிறுவனம்  அல் பஷர்  சர்வதேச அமைப்புடன்  இணைந்து  28ஆவது தடவையாக இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை  இம்முறையும்   காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடாத்துகிறது.

இந்த சந்திர சிகிச்சை முகாம் நேற்று (06) தொடக்கம் எதிர் வரும் 17ம் திகதி வரை இடம் பெறுவதுடன் இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண் வைத்தியர்கள் இங்கு சத்திர சிகிச்சையை மேற் கொள்கின்றனர்.

 இத்திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட   பரிசோதனை முகாம்கள் மூலம்  சகல  இனங்களையும் சேர்ந்த வசதி குறைந்த  ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நோயாளர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றளர்

இந்த சத்திர சிகிச்சை முகாம் தொடர்பான கலந்துரையாடல் (06) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தலைமையில் இடம் பெற்றது.

இதில் கண்புரை சத்திர சிகிச்சையை மேற் கொள்ளும் பாகிஸ்தான் கண் வைத்தியர்கள் மற்றும் காத்தான்குடி ஆதார வைத்திய சாலை நிருவாக உத்தியோகத்தர் நியாஸ்  ஆமிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள்
உட்பட வைத்திய சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்