கதிரவன் கலைக் கழகம் "50 ஆண்டுகள் 50 நிகழ்வுகள்" எனும் திட்டத்தில் "ஊர் இருந்து உலகம் வரை" எனும் பொன் விழா வாசகத்திற்கு அமைய "வாழும் தமிழ் வாழ்க" எனும் மகுட வாக்கியத்தின் நிமித்தம் மூன்றாவது தடவையாக இந்தியா - தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மற்றும் கலை-இலக்கிய நிகழ்வுகளில் பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபற்றும் பயணத்தில் பல தடங்களைப் பதித்துள்ளனர்.
இதில் முதல் அங்கமாக உலக தமிழ்ச் சங்கம் மதுரையில் நடைபெற்ற சான்றோர் பெருவிழாவில் கதிரவன் கலைக்கழகம் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்விற்கு பிரபல பேச்சாளரும் உலகத் தமிழ் சங்க துணைத்தலைவரும் இயக்குநருமாகிய முனைவர் பர்வீன் சுல்தானா அம்மணி அவர்கள் தலைமை வகித்ததுடன் கதிரவன் கலைக்கழகம் சார்பாக கதிரவன் த. இன்பராசா , புதுவையூர் பு.தியாகதாஸ், சோலையூரான் ஆ. தனுஷ்கரன், கவிஞர் ஜீ. எழில்வண்ணன், கவிஞர் தங்க யுவன் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

.jpeg)
.jpeg)





