சேதமடைந்து மூடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மகிழ வெட்டுவான் பாலத்தை திருத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை

  




 freelancer

மட்டக்களப்பு மகிழ வெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலம்  முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது. இப் பாலத்தின் ஊடாக நாளாந்தம்  அதிகளவான மக்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு  சிறிய மற்றும் கனரக  வாகனங்களும்  பாலத்தின் ஊடகவே  பயணம் மேற்கொள்கின்றன
 வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மகிழ வெட்டுவான் கிராமத்துக்கு செல்லும் முக்கிய பாலமே இவ்வாறு சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது,  கடந்த சில நாட்களாகவே பாலத்தின் கீழ் பகுதி  வெடித்த நிலையில் இருந்தும் சம்பந்தப்பட்ட    அதிகாரிகள் எந்தவித  நடவடிக்கையும்   எடுக்கவில்லை.
 பொதுமக்கள்  ஆயித்தமலை  சென்று நெல்லிக்காடு ஊடக  மகிழ வெட்டுவான், கற் குடா  நரிப்புல்த்தோட்டம்  வரை செல்வதற்கு   நீண்ட தூரத்தை கடக்க வேண்டி உள்ளது   பொறுப்பு கூறவேண்டிய  அதிகாரிகள் இதனைக் கருத்தில் கொண்டு  பாலத்தை திருத்தி அமைத்து பொது மக்கள்  தடையின்றி பயணிக்க  உரிய நடவடிக்கை எடுக்குமாறு     மகிழவெட்டுவான் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.