நாமல் ராஜபக்ஷ மற்றும் அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவர் பெயர்களை தேங்காய்களில் எழுதி அடித்து உடைத்த சம்பவம் ஓன்று பதிவாகி உள்ளது

 


பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் செவ்வாய்க்கிழமை (28) காலை வருகை தந்த போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

சிவில் சமூக ஆர்வலர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யத் தயாரானதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு குழுவினருக்கும் சிவில் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுக்கும் இடையே வாய்கத்தர்க்கம் ஏற்பட்டது, பொலிஸார் தலையிட்டு அவ்விரு குழுக்களையும் கலைத்தனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவர் பெயர்களை தேங்காய்களில் எழுதி சிதறுதேங்காய்கள் இரண்டை அடித்து உடைத்தனர். 

அவ்விடத்திலிருந்து வாகனத்தில் சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதோடு, அவருக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.