ஆணிவேர் உற்பத்திகள் சிறுதானிய உணவகத்தின் சிறுதானிய உணவுத்திருவிழா நிகழ்வு -2024

 



 












































 

நிகழ்வுக்கு  பிரதம விருந்தினராக  மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி .ஜஸ்ரினா ஜீலைகா முரளீதரன் கலந்துகொண்டார்.

சிறப்பு  விருந்தினர்களாக   திருமதி. தர்சினி முருகுப்பிள்ளை   வைத்திய அதிகாரி, மாகாண சுகாதார  பயிற்சி நிலையம்,,
தயாமதி பியோ ஜுட் நவிந்தன்  கணித துறை தலைமை அதிகாரி    கிழக்கு பல்கலைக்கழகம்,
திருமதி துஷ்யந்தினி சத்யஜித்   நுண்கலை தலைமை அதிகாரி கிழக்கு பல்கலைக்கழகம் ,
திருமதி. பிரபாளினி சுரேஷ் ரொபேட்   சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்.   பிராந்திய உதவி ஆணையாளர் அலுவலகம்.ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

அரசாங்க அதிபர்  திருமதி.ஜஸ்ரினா ஜீலைகா முரளீதரன்  சம்பிரதாய பூர்வமாக திருவிழாவை ஆரம்பித்து வைத்தார் .
உணவுத் திருவிழாவின் பிரதான இலக்கு  மக்கள் மத்தியில் சிறுதானிய உணவில் உள்ள நன்மைகள் மற்றும்  ஆரோக்கிய உணவுப்பழக்கத்தை   பின்பற்றுவதும்  மேலும்     , அதனை தயாரிப்பது என்பது பற்றியும் ஒரு விழிப்பூட்டலை கொண்டு செல்வதுமாகும் ..

அன்றைய தினம் சிறுதானியத்திலான உணவுப்பொதிகளும் உடனடியாக தயாரிக்கப்பட்ட     உணவுகளும் விற்பனை செய்யப்பட்டன..
மேலும் வீதிநாடகங்கள், வீணைக் கச்சேரி,  சிறுவர்களுக்கான முக ஓவியம் வரைதல், மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் கதை சொல்லும் போட்டி, மாட்டு வண்டியில் சவாரி போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன .

மேலும் ஆரோக்கிய உணவுப்பழக்கம் தொடர்பான கலந்துரையாடலில் தொழில் சார் வளவாளர்கள் பங்கேற்றனர்.

உணவும் உளநலமும்    என்ற கருப்பொருளில் மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் ,   உளநல வைத்திய ஆலோசகர்   Dr.கடம்பநாதன் தனபாலசிங்கம்
உரையாற்றினார் ,   உணவும் சிறுதானியமும்  என்ற தலைப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,மருத்துவப் பேராசிரியர்  Dr.K.D. சுந்தரேசன்   மற்றும் முன்னாள் பேராசிரியர் கிழக்கு பல்கலைக்கழகம் கலாநிதி நித்தி கனகரெட்னம்   ஆகியோரும்   தமது  கருத்துக்களை பகிந்து கொண்டனர் .

உணவு மற்றும் பொருளாதாரம் பற்றி கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் யு.என்.டிபி  திரு. பார்த்தீபன் குலசேகரம் விளக்கமளித்தார் .

இரண்டாம் நாள் திருவிழாவின் போது உணவும் சிறுதானியமும் பற்றி    ஆயுள்வேத வைத்தியர்  Dr.தனபாலசிங்கம் அருணன் அவர்களும் ,  உணவும் உறையுளும் என்ற தலைப்பில் கட்டிடக்கலைஞர்   திரு.கணேசமூர்த்தி செந்தூரன்  அவர்களும்   உணவுப்பழக்கங்களின் மாற்றங்கள்,   மற்றும்  இயற்கை முறையிலான விவசாய உட்பத்தி பற்றி முறையே   Dr.லவபிரதன் மற்றும்  கட்டிட பொறியியலாளர்    திரு.முகமட் றிலா  அவர்களும்  உரையாற்றினார்கள் .