(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (23) பக்தி பூர்வமாக,அடியவர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் தீமிதிப்பு இடம்பெற்றது.
இதன்போது ஆரம்பத்தில் முருகப் பெருமான் அழகு சப்புறத்தில் வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் இவ்வாலய உற்சவம் கடந்த வியாழக்கிழமை (16) வாஸ்து சாந்திக் கிரியைகளுடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.












































