மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் தலைமையில் பாரம்பரிய உணவுக் கண்காட்சியும் மற்றும் விற்பனை நிகழ்வும் இடம் பெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவின் மேலதிக செயலாளர் சந்தன திலகரெட்ண, சுதேச வைத்திய அமைச்சின் பணிப்பாளர் .பி. தயானந்தன் , மாகாண பணிப்பாளர் வைத்தியர் ஜெயலட்சுமி பாஸ்கரன் , சித்த ஆயுர்வேத பொரளை வைத்தியசாலை தொழில் நுட்ப பிரிவு மருத்துவ உத்தியோகத்தர் டாக்டர் கிஷோர் லோஷன் மற்றும் வைத்தியர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் குறிப்பிட்ட நிகழ்வில் இலவச மருத்துவ முகாம் , ஆயுர்வேத உற்பத்திகள் , பாரம்பரிய உணவு கண்காட்சி மற்றும் விற்பனையும் இடம் பெற்றதுடன் செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டது
சுதேச வைத்திய அமைச்சின் நிதி அனுசரணையுடன் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலுடன் பிரதேச செயலக சுதேச வைத்திய உத்தியோகத்தர்களான T.வேணுகா, M. ஜெயபால் ஆகியோரின் ஒழுங்கு படுத்தலின் கீழ் இடம் பெற்றது .
இதனை தொடர்ந்து சித்த ஆயுர்வேத பாதுகாப்பு சபையினரால் வலுவூட்டல் மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமான செயலமர்வு இடம் பெற்றது பாரம்பரிய வைத்தியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலும் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது

















































