கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!



















கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய  கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறு  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.


அக்கோரிக்கையின் பிரகாரம் ஆளுநர் செந்தில் தொண்டமானின்  241 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு, கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் எவ்வித இன்னல்களும் இன்றி தங்களது கடமைகளை திறம்பட செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி ஆளுநரால் இன்று திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டதுடன், அரச உத்தியோகஸ்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

அரச உத்தியோகஸ்தர்கள் வேகமாக  மக்கள் பணியை முன்னெடுக்க இக்கட்டிடத்தை நிர்மாணித்து கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.