“மனதைக் கட்டுப்படுத்த சுவாசம் போதும்”- சுவாமி விவேகானந்தர்.








 (நளினி ரத்ன ராஜா மனித உரிமை செயற்பாட்டாளர் வாழ்க்கை மேம்பாட்டு பயிற்றுவிற்பார்கள்- கனவு மெய்ப்படுகின்றது)


 
 
(படம்  இணையத்தில் பிரதி பண்ணப்பட்டது)
 

 
"மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு" ஆனால் இந்த குரங்கை நம்  கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்  என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  இந்த குரங்கை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தற்காலத்தில் நாங்கள் பேசுவது போன்று மன உளைச்சல் என்ற வார்த்தையை பாவிக்க  மாட்டோம். ஆம்  எப்படி கட்டுப்படுத்தலாம்? எளிய முறை தான் மூச்சுப் பயிற்சி செய்வது.  புத்தரில் இருந்து சித்தர்கள்  விவேகானந்தர் விபுலானந்தர் போன்றவர்கள் இதைப் பற்றி ஆழமாக  எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். அவற்றை தேடிப்படிப்போம் பயிர்ச்சி செய்வோம் நிம்மதியாக வாழுவோம்.

மூச்சு வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.   மூச்சு இல்லாவிட்டால் நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.  இந்த மூச்சுக்கும் எங்களது சிந்தனைக்கும் நேரடி தொடர்பு இருக்கின்றது . எங்களது சிந்தனைகளை  கட்டுப்படுத்த, ஒழுங்கு அமைக்க, சீரமைக்க மூச்சு பிரதானமானது. எங்களது உணர்வோடு சம்பந்தப்பட்டது, எங்களோடு சம்பந்தப்பட்டது, எங்கள் ஆத்மாவோடு சம்பந்தப்பட்டது.

மூச்சு என்பது எங்களால் கட்டுப்படுத்தக் கூடியது . எங்கள் சிந்தனைகளை கட்டுப்படுத்த இயலாத தருணங்களில் குறிப்பாக கவலை, கோபம் ,எரிச்சல் மன உளைச்சல் போன்ற நேரங்களில் உங்கள் மூச்சை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்த உணர்வை  கட்டுப்படுத்தலாம்.  முக்கியமாக எங்கள் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை யாரும் பார்க்க முடியாது ,ஆனால் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை உங்கள் மூச்சு  கொடுத்துவிடும்.  கோபமாக இருந்தால் ஆத்திரமாக இருந்தால் சினமாக இருந்தால் அல்லது கவலையாக இருந்தால் அது மூச்சில் வெளிப்படும்.  உதாரணத்துக்கு பெருமூச்சு விடுவோம் அந்த பெருமூச்சு நாங்கள்  எதைப் பற்றியோ  கவலைப்படுகின்றோம், ஆழ்ந்து சிந்திக்கின்றோம் அல்லது  நடக்குமா நடக்காதா என்பது பற்றி யோசிக்கின்றோம் என்பதை காட்டிவிடும்.  அதே நேரம் கோபம் ஆத்திரம் சினம் இருந்தால் உங்கள் மூச்சு விரைவாக வரும் சூடாக வரும்.  அமைதியாக இருந்தால்  அல்லது சாந்தமாக இருந்தால் அன்போடு இருந்தால் மூச்சு ஒரு விதமாக  நேர்த்தியான ஒரு அழகான இசை மாதிரி இருக்கும்.  ஆக இந்த மூச்சுகளை கொண்டு நாங்கள் ஒருத்தர் என்னஆக இந்த மூச்சுகளை கொண்டு நாங்கள் ஒருத்தர் என்ன எண்ணுகிறார் எப்படியான மனா நிலையில் இருக்கின்றார் என்ன சிந்திக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியும். சிந்திப்பதை மறைக்கலாம் ஆனால் மூச்சை நாங்கள் மறைக்கவே முடியாது.

மூச்சு எடுக்கும் போது நாங்கள் ஆக்சிஜன் வாயுவை உள்ளெடுக்கின்றோம் மூச்சு விடும் போது உடலிலுள்ள  கரியமில வாயுவை வெளியேற்றுகின்றோம்.  பாருங்கள் இதுவே எவ்வளவு அழகான ஒரு செயல்பாடாக இருக்கின்றது.  உங்கள் உடல் ஆக்ஸிஜனின் காற்றிலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தொழிற்சாலை அல்லவா ?

சிந்தனைக்கும் மூச்சுக்கும் உள்ள தொடர்பு வலுவாக இருப்பதனால் எங்கள் சிந்தனையை கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் மூச்சை கட்டுப்படுத்தினாலே போதும் என்பது எவ்வளவு அருமையான ஒரு முறை. நாங்கள் மூச்சு எடுக்கும் எண்ணிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க இந்த உலகத்தில் நாங்கள் வாழும் நாட்கள் குறைந்து கொண்டே போகின்றது .

சாதாரணமாக மனிதர்கள் 18ல் இருந்து 20 முறை ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்கின்றார்கள் .இவர்கள் சராசரியா 80 திலிருந்து 100 வயது வரை வாழக் கூடியவராக இருக்கின்றார்கள்.   இதே போன்று நாய் சராசரியாக 15,  16 வருடங்கள் மட்டுமே வாழக்கூடியது.  இது ஒரு  நிமிடத்திற்கு 20 லிருந்து 30 தடவைகள் மூச்சு எடுக்கின்றது இதன் வாழ்நாள் காலங்கள் மிக குறைவாக இருக்கின்றது. ஆமையானது ஒரு நிமிடத்திற்கு 3 அல்லது 4   மூச்சு எடுக்கின்றது ஆனால் 400 , 500 வருடங்கள் வாழக்கூடியதாக இருக்கின்றது.  இந்த உதாரணங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றது ?.
 மூச்சு பயிர்ச்சி  செய்தால்  சிந்தனை கட்டுப்படுத்த கூடியவராக இருப்போம், நேர்மறையாக சிந்திப்போம் .  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் மற்றும் சித்தர்கள் எங்களுக்கு கற்பித்துக் கொடுத்த முறைகள் ஆகும்   நீண்ட காலம் ஆரோக்கியமாக நிம்மதியாக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றால் நாங்கள் எங்கள் மூச்சை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பழக வேண்டும்.  மூச்சு எடுக்கும் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அது குறைக்க முடியும் அதற்கு தினமும் பல தடவைகள் மூச்சுப் பயிற்சி செய்வது மிக முக்கியமானதாகும். எங்களது மூச்சு எடுக்கும் எண்ணிக்கை குறைய குறைய நாங்கள் வாழும் காலம் அதிகரித்துக் கொ ஆராய்ச்சிகள் சொல்கின்றன எங்களது மூச்சை நாங்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் மன உளைச்சல்களை கவலைகளை நாங்கள் கட்டுப்படுத்தலாம் என .  இதற்கு உண்மையில் ஆராய்ச்சி தேவையே இல்லை.  நீங்கள் கோபமாக டென்ஷன் ஆக மன உளைச்சலில் இருக்கின்றீர்களோ அப்போது உங்கள் மன ஓட்டத்தை சிந்தனை ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் ஒரு நிமிஷம் அல்லது ஐந்து  நிமிடங்கள்   மூச்சு பயிர்ச்சி செய்தால்  சிந்தனை ஓட்டத்தை நீங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வரலாம்.  வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல சவால்களை பிரச்சனைகளை நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம், இந்த சந்தர்ப்பங்கள் உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக பலர் இந்த காலப்பகுதியில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.  யாரிடம் கேட்டாலும்  ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை மிக சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றது . ஆனால் இயற்கை தந்த கொடையான  இந்த உடலை இந்த மூச்சை நாங்கள் சரியான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் எந்த விதமான மன உளைச்சலையும் கவலைகளையும் நாங்கள் இல்லாது ஆக்க முடியும்.  மூச்சுப் பயிற்சிகள் பலவிதம் இருக்கின்றது பல முறைகள் இருக்கின்றது நாங்கள் தொடக்கத்தில் ஒரு இலகுவான முறையை கையாள வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு அமைதியான இடத்தில் நேராக அமர்ந்திருந்து உங்களது மூச்சை நீங்கள் கவனிக்கலாம் மற்றும் சூடான காற்று மூக்கு துவாரத்தின் ஊடாக  உடலை விட்டு வெளியேறுவதை உன்னிப்பாக கவனிக்கும் பயிற்சியை நீங்கள் செய்யலாம்.  மூச்சை உன்னிப்பாக கவனிக்கவும் முறையே நீங்கள் செய்து கொள்ளலாம்.  அதற்குப் பின்  குறிப்பாக மூச்சை ஒரு மூன்று செகண்ட்களுக்கு அல்லது நாலு செகண்ட் களுக்கு  மெதுவாக மூக்கால்  உள்ளடுத்து ஏழு செகண்ட் களுக்கு நிறுத்தி  வைத்து  பின் எட்டு அல்லது ஒன்பது செகண்ட்களுக்கு மெதுவாக வாயால் காற்றை வெளியே ஊதி தள்ளலாம். முள்ளம் தண்டு நேராக  இருக்கும் வண்ணம் அமர்ந்திருந்து இந்த பயிற்சியை நீங்கள் செய்ய பழகிக் கொள்ளலாம்.  இந்த பயிற்சிகளை ஆழமாக  கற்றுக் கொள்ள விரும்பினால் அது சம்பந்தப்பட்டவர்கள் இலங்கையில் நிறைய பேர் இருக்கின்றார்கள் நிறைய அமைப்புகள் இருக்கின்றது அவர்களின் உதவியோடு நீங்கள் இவற்றை இன்னும் ஆழமாக கற்றுக் கொண்டு பயிற்சி செய்யலாம்.

 இது கட்டாயம் உங்களால் செய்யக்கூடியது எந்த செலவுமே இருக்க போவதில்லை.  உங்கள்   உடல் , வாழ்க்கை, உங்கள் மூச்சு உங்கள் சிந்தனை போன்றவை உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பவை.  நீங்கள் நினைத்தால் உங்களால் செய்யக்கூடியது .  மூச்சு பயிர்ச்சி செய்வோம், சிந்தனைகளை எண்ணங்களை எம் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். ஆரோக்கியமாக நிம்மதியாக நிறைந்த பொருளாதாரத்துடன் வாழ நாம் எல்லோரும் தகுதியானவர்கள்.