மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் இன்று காலை விசேட நினைவு திருப்பலி பூஜைகள் இடம் பெற்றது

 

 





 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  விசேட திருப்பலி நினைவு பூஜைகள் இடம் பெற்றது

 இதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தி லும் இன்று காலை ஆலய பங்குத்தந்தை ஜாேர்ஜ் ஜீவராஜ்  அருட்தந்தை தலைமையில் இன்றைய இந்த விசேட திருப்பலி பூஜைக்கு மட்டக்களப்பில் உள்ள பெரும் தொகையான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டதுடன் சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது

இன்றைய இந்த விசேட வழிபாட்டின் போது ஆலய பங்குத்தந்தையினால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குரிய தண்டனையை இறைவன் அவர்களுக்கு வழங்க  அனைவரும் ஆண்டவரிடம் வேண்டுகோள்களை வைக்க வேண்டும் எனவும் இனிமேல் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும். இங்கு குறிப்பிட்டார்