மக்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை தேர்ந்தெடுத்து விட்டனர்



அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

களனியில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லை என்றும், பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவதாகவும் தெரிவித்தார்.

"நாங்கள் தேர்தலை இலக்கு வைத்து இதை செய்யவில்லை. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இங்கு உள்ளனர். பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க அவரால் தான் முடியும் என்பதால் மக்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை தேர்ந்தெடுத்து விட்டனர்” என அவர் கூறினார்.