(கல்லடி செய்தியாளர்)
2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான உறவுகளுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பலியான உறவுகளுக்கான நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ,கோசங்களை எழுப்பியவாறு தமது உணர்வு பூர்வமான எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,முன்னாள் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன்,வணபிதாக்களான ஜோசப்மேரி,நலரெத்தினம்,சிவில் சமூக ஏற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன்,எஸ்.லவக்குமார் மற்றும் உயிர்நீத்தவர்களின் உறவுகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




















