பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​ கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவர்கள் .

 


வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணையின் போது,  பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.