மட்டக்களப்பில் முதன்முறையாக சிறுவர்களுடாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்டது





























  மட்டக்களப்பில் முதன்முறையாக "போதையற்ற நாடும் செளபாக்கியமான தேசம்" எனும் கருப்பொருளில்  சிறுவர்களுடாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டிகள் திராய்மடு விளையாட்டு மைதானத்தில் யூபா (YouPah)சிறுவர் கழகத்தின் இயக்குனர்  ப.தினேஸ் தலைமையில் நேற்று (13) திகதி முன்னெடுக்கப்பட்டது . இந் நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்பரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறுவர்களூடாக சமூகத்தை விழிப் பூட்டும் உயரிய சிந்தனையின் அடிப்படையில் இவ்  உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இப் போட்டியில்  11  விளையாட்டு அணிகள் கலந்து கொண்டு
சிறப்பாக விளையாடி இருந்தனர்
இந் நிகழ்விற்கான ஊடக அனுசரனை BATTIMEDIA வழங்கியிருத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது   வெற்றிஈட்டிய சிறார்களுக்கு   சான்றிதழ்களும் வெற்றி கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்விக்கு  மட்டக்களப்பு    மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்  ரி.மதிராஜ்,   நரம்பியல் விஞ்ஞானி எம். கீதாஞ்சன், மற்றும்   சீற் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் ஜே.ரூசாந்தன் ஆகியோர்  கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .