ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!












(கல்லடி செய்தியாளர்)

2019.04.21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பில்  பலியான 31 உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விஷேட பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்துக்கு அருகாமையில்  அமைக்கப்பட்டுள்ள பலியான உறவுகளுக்கான நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இப் பிரார்த்தனையில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஆத்ம ஈடேற்றம் வேண்டி மனமுருகி,கண்ணீர் மல்கிப் பிரார்த்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது நாவற்குடா மெதடிஸ்த திருச்சபை பங்குத் தந்தை வணபிதா அருள்ராஜ்,சீ.ஈ.ஆர்.ஐயின் தேசிய இயக்குனர் எவநேசர் தர்ஷன், மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபை  அருட்தந்தை அருட்கலாநிதி கே.ஜே.அருள்ராஜ்,கரவெட்டி சியோன் சபை போதகர் எஸ்.திருக்குமரன் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தோரின் உறவுகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் உயிர்நீத்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.