மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவேந்தல் குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் அனுஷ்டிப்பு- 2024.04.21












மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவு தினத்தையிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2019 ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்பை சேர்ந்த ஸாரான் காசிமின் தலைமையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5ம் ஈண்டு நினைவேந்தலையிட்டு சீயோன் தேவாலயத்தில் போதகர் மகேசன் ரொசான் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றதுடன் உயிரிளந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனை இடம்பெற்றது .


அதேவேளை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தேவாலயம் இதுவரை புனர்நிர்மான செய்யப்படாமல் பூட்டப்பட்டு இருந்துவருகின்ற நிலையில் அங்கு இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்று மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர், அத்தோடு  சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் பார்வை பாதிக்கப்பட்ட சிறுமியும் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார் .