சின்ன காலபோட்டமடு கம்பன் பாலர் பாடசாலை சித்திரை புது வருட விளையாட்டு விழா -2024











 
































































பின் தங்கிய பிரதேச கல்வி விழிப்புணர்வுச்  செயற்பாட்டுக்காக உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் சின்ன கால போட்டமடு கம்பன் பாலர்  பாடசாலையில்  விளையாட்டுப்போட்டி ஒன்று நடாத்தப்பட்டது.

 
பாலர் பாடசாலை ஆரம்பித்து 15  வருடங்கள்   கடந்த நிலையில்   நடாத்தப்பட்ட முதலாவது விளையாட்டுப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது 

  
பாலர் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி ஜெயகலா நிசாந்தன் அவர்களின் ஒழுங்கு படுத்துதலின் கீழ் நடை பெற்ற விளையாட்டுப்போட்டியில்  பிரதம அதிதியாக சிரேஷ்ட  விரிவுரையாளரும், உதவும் கரங்கள் நிறுவனத்தின் தலைவருமான S. ஜெயராஜா அவர்களும்,   கௌரவ அதிதிகளாக உதவும் கரங்கள் நிறுவன முகாமையாளர்    சி புவிராஜன் , மற்றும்  உதவும் கரங்கள்  விபுலானந்தர் பாடசாலை ஆசிரியைகளான  திருமதி .கே ஜெயந்தினி , கே .கவிதா ,எம். பிரவிணி  ஆகியோரும் கலந்து கொண்டனர்,  மேலும்  கம்பன் பாலர் பாடசாலை இணைப்பாளர் யோகநாதன் ,மாதர்சங்கத்தினர் ,மற்றும் விளையாட்டுக்கழகத்தினர் கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்கினார்கள் 

.
ஊசியில் நூல்கோர்த்தல் ,பணிஸ் சாப்பிடுதல் பலூன் ஊதி உடைத்தல்,  போன்ற  போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய பாலர்களுக்கு  அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டன .

, தொப்பி மாற்றுதல் ,   மா ஊதி சில்லுறை நாணயம் எடுத்தல்  போன்ற  போட்டிகள் பெரியவர்களுக்காக   நடத்தப்பட்டன , வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால்  பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன
போட்டியின் முடிவில் அனைவருக்கும் மத்திய உணவு  வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது