மட்டக்களப்பு கல்லடி Green Garden Hotel இல் "கனவு மெய்ப்படுகின்றது இன்ற தொனிப்பொருளில் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரெட்ணராஜா அவர்களால் செயலமர்வொன்று முன்னெடுக்கப்பட்டது .

 












































இந்த உலகத்தையே இன்று  ஆட்டிப்படைப்பது மனிதனின் மனம்.  மனிதனின் கற்பனை. இன்று நாங்கள் அனுபவிக்கும் சகல வசதி வாய்ப்புகளும் என்றோ ஒரு நாள் யாரோ ஒருத்தருடைய கற்பனையில் உருவானது தான் அதேபோல் இன்று இல்லாமல் இருப்பது நாளை உருவாகும். 
 

மனித மனத்துக்கு இயலாதது என்று சொல்ல எதுவுமே இல்லை. மனம் நினைத்தால் எல்லாமே சாத்தியப்படக் கூடியது. அந்த மனம் உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. உங்களுக்கும் இருக்கின்றது.

அந்த மனதை அதில் எழும் சிந்தனைகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதன் மூலமாக நாங்கள் விரும்பும் அமைதியான சந்தோஷமான நிறைந்த பொருளாதாரத்தைக் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எல்லோரும் முடியும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி பயிற்சி கொடுப்பதுதான் தான்  கனவு மெய்ப்படுகின்றது பயிற்சியின் முழு நோக்கம்.  இதைத்தான் "நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்று சகல அறிஞர்களும் மகான்களும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற தத்துவ மேதைகளும் பாரதியாரும் கூட சொல்லி சொல்லி இருக்கின்றார்கள்.

இந்த அடிப்படையில் மகளிர் மாதமான பங்குனி மாசத்தை அடிப்படையாக வைத்து இலங்கையில் மூன்று மாவட்டங்களில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது மன வலிமையை திடப்படுத்தும் பயிற்சி திட்டம் நடைபெற்றது.

சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் பெண்களுக்கு பல விதமான மன உளைச்சல்கள் மன சுமைகள் அழுத்தங்கள் இருக்கின்றது.  காரணம் சமூகத்தின் பிரச்சினைகளையும் கேட்டு அதற்கு தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மக்களை வழிநடத்துவதில்   பெண் சமூக செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள். 

இவர்கள் தனது பிரச்சினையை பார்த்துக் கொள்ள வேண்டும் தனது குடும்பத்தின் தேவைகள் பிரச்சனைகள் சவால்களையும் நிர்வகித்துக் கொண்டு சமூகத்தில் உள்ளவர்களின் பிரச்சனையும் காது கொடுத்து கேட்டு அதற்கு சரியான வழிகாட்டல்களை செய்ய வேண்டியுள்ளது. 

ஆகவே இரட்டைச் சுமையுடன் இருக்கும் பெண் சமூக செயற்பாட்டாளர்களுக்கு இந்த பயிற்சி மிக முக்கியமானது.  பிரச்சினைகள் தனிநபர் ரீதியாக எங்களை பாதிக்காமல் இருக்க நாங்கள் என்ன விதமான பயிற்சிகளையும் யுக்திகளையும் கையாள வேண்டும் என்பதுதான் இங்கே சொல்லிக் கொடுக்கப்பட்ட விடயங்கள்.  ஆனால் உண்மையில் நேர்மறை சிந்தனை ஆளராக வர தொடர் பயிற்சி செய்ய வேண்டும், மனதை பயிற்சி செய்வதன் மூலம் நேர்மறை சிந்தனை மற்றும் மனப்பாங்கு ஏற்படுத்த முடியும்.

இதற்கான   மெஞ்ஞானபூர்வமான விஞ்ஞானபூர்வமான விளக்கங்கள் நளினி ரட்ன ராஜாவால் உதாரணங்களுடன் விளக்கப்பட்டது.  அது எப்படி கையாள்வது என்ன செய்யலாம் என்ற நடைமுறை யுக்திகளை வளவாளர் மாஸ்டர் சிவலிங்கம் ஸ்ரீதரன் அவர்கள் பங்கு கொண்டு பங்குனருக்கு சொல்லிக் கொடுத்தார். .

உண்மையில் இன்றைய காலப்பகுதியில் எங்களுடைய சிந்தனைகளை எவ்வாறு நல்ல சிந்தனைகளாக தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்பது சமூகத்துக்கு தேவையான ஒரு பாடமாக இருக்கின்றது . இதை எல்லோரும் கற்றுக்கொண்டு எங்களிடம் இருக்கும் ஆற்றலை சக்தியை நாங்கள் பாவித்து எங்களுடைய வாழ்க்கையை ஒளிமயமாக ஆக்க வேண்டும்,  சுற்றுப்புற சூழலில் இருப்பவர்களுடன் சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வேண்டும் தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே இங்கே எடுத்து  கூறப்பட்டது. இதில் சகலரும் இணைந்து கொண்டு இந்த பயணத்தில் பங்காளிகளாக ஆக வேண்டும் என்பதே கனவு மெய்ப்படுகின்றது நிகழ்ச்சியின் நோக்கமாக  இருக்கின்றது.  நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.  சிந்தனையை மாற்றுவோம் வாழ்க்கை மாறும்.  இப்படியானதொரு பயிற்சி இன்று 29ஆம் தேதி மட்டக்களப்பில் தனியார் விடுதியில் இந்த பயிற்சி கனவு மெய்ப்படும் கருப்பொருளின் ஸ்தாபகர் நளினி  ராஜாவால் நடத்தப்பட்டது.  இதில் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பங்கு கொண்டார்கள்.

இதே பயிற்சியை நளினி ரத்ன ராஜா அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 nalini.fce@gmail.com இல் அவரை தொடர்பு கொள்ளலாம்.