இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

 











 

 

 

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததான கண்டன ஆர்ப்பாட்டம், இன்று காலை அரசடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களின் சம்மேளனம் அதனோடு இணைந்த சங்கங்களும் இணைந்து நடாத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிருவகத்தின் ஊழியர்களும் மருத்துவ பீட மற்றும் கலை பீட பல்கலைக்கழக ஊழியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து, கல்வி சாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையை சீர்செய், மாதாந்த இழப்பீட்டுத் தொகையை 75 வீதமாக அதிகரி, சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வும் இல்லை போன்ற கோஷங்களையும் பதாகைகளையும் எந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டமானது வாராந்த போராட்டமாக உருவெடுத்துள்ளதாகவும் ஒவ்வொரு வாரமும் இந்த போராட்டத்தினை அரசுக்கு எதிராக முன்னெடுக்க இருப்பதாகவும் அது எப்போது எந்த நேரத்தில் நடைபெறும் என்பதனை இறுதி நேரத்திலே நிர்வாகத்திற்கு தெரிவிப்போம் எனவும் சங்கத்தின் தீர்மானம் இருப்பதாக தெரிவித்தனர்.

எட்டு வருடங்களாக கேட்டு வருகின்ற 17 வீத சம்பள முரண்பாட்டின் உடைய எச்சத்தினை இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்று இந்த போராட்டத்தினால் அப்பாவி மாணவர்கள் தங்களுடைய இறுதி பரீட்சைகள் அனைத்தும் நடைபெற முடியாத ஒரு துர்பாக்கிய நிலையில் இருக்கின்றார்கள்.

இதற்குக் காரணம் எங்களது சங்கமோ அல்லது எங்களுடைய சம்மேளனமோ இல்லை இதற்கு பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்ற இந்த பிரச்சனைக்கு தீர்வினை தரக்கூடிய உயர் அதிகாரிகள் இன்னமும் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பது எங்களுக்கு மன வேதனையாக இருக்கின்றது.

எங்களுடைய சம்மைளனம் மிக உறுதியாக இருக்கின்றது எங்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.