கல்குடா புனித ஆரோக்கிய அன்னை தேவாலய திருச்சொரூப ஊர்வலம்.

 




















 

 இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும்.

இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதனை முன்னிட்டு கல்குடா  புனித ஆரோக்கிய அன்னை  தேவாலய பங்குதந்தையின் ஆசீர்வாதத்துடனும், பங்கு மக்களின் பங்கேற்புடனும் இன்று வெள்ளிக்கிழமை (29) திருச்சொரூப ஊர்வலம் இடம்பெற்றது.

கல்குடாவிலிருந்து ஆரம்பமான திருச்சொரூப ஊர்வலமானது கல்குடா வீதியூடாக தேவாலயத்தைச் சென்றடைந்தது.

குறித்த சிலுவைப்பாதை நிகழ்வுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை நினைவுக்கூறும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது