நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

 


நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே முடிந்தவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வானில் முகில் கூட்டம் குறைவடைந்துள்ளமை என்பன இந்த வெப்பநிலைக்கான காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.