மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி 2024





களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் விளையாட்டுப் போட்டியானது இன்றைய தினம் (16)  பி.ப 2.30 மணியளவில் வித்தியாலய அதிபர் பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் , முதன்மை  அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளர் ச. சிறிதரனும் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் இதயகுமார் ,  ஓய்வு பெற்ற பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய அதிபர் பொ.வன்னியசிங்கமும் கலந்து கொண்டனர் மேலும் பல கிராம நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது முதல் நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்திய கருவிகளுடன் வரவழைக்கப்பட்டு , மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் அதிபர் உரை ,மற்றும் விளையாட்டு நிகழ்வை உத்தியோக பூர்வமாக கௌரவ இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார், அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு , சத்தியப்பிரமாணம் இடம்பெற்று , மாணவர்களின் அணிநடை மரியாதை இடம்பெற்றது.இந் நிகழ்வில் விசேடமாக ஹடற் மாணவ  படையணியின் அணிநடை மரியாதை நிகழ்வை அலங்கரித்தது.மேலும் உடற்பயிற்சி கண்காட்சியும் நிகழ்வை அலங்கரித்தது.

இதன்போது வெற்றியீட்டிய , இல்லங்களுக்கும் , மாணவர்களும் பதங்கள், வெற்றிக்கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கலப்பு அஞ்சல்,பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டமும் இடம்பெற்றது.